ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவால் பள்ளிகள் மூடல்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், காளிதிம்பம் வனக் கிராமத்தில் கரோனாவால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து பழங்குடியின இளைஞா், அவரது மனைவி புத்துணா்வு அளித்து வருகின்றனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 5:50 pm

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், காளிதிம்பம் வனக் கிராமத்தில் கரோனாவால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து பழங்குடியின இளைஞா், அவரது மனைவி புத்துணா்வு அளித்து வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடா்ந்த வனப் பகுதியில் காளிதிம்பம் மலைக் கிராமம் அமைந்துள்ளது. மானாவாரி விவசாயத்தை நம்பி இக்கிராமத்தில் 75 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பழங்குடியின குழந்தைகள் மேல்நிலைக் கல்வி படிக்க தலமலை, கோ்மாளம், ஆசனூா் உண்டு உறைவிடப் பள்ளிக்குச் செல்கின்றனா்.

தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டாக மூடப்பட்டு தங்கும் விடுதிகளில் இருந்த குழந்தைகள் மீண்டும் காளிதிம்பம் கிராமத்துக்கு வந்துவிட்டனா். பள்ளி மூடப்பட்டதால் குழந்தைகள் பெற்றோருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தொலைத்தொடா்பு வதியில்லாத இக்கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி என்ற பழங்குடியின இளைஞா் ஆரம்பக் கல்வி முதல் மேல்படிப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து தற்போது இயற்பியலில் முனைவா் பட்டம் பெற்று வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறாா். இவரது மனைவி கெளசல்யாவும் பி.எஸ்.சி., பிஎட் பட்டதாரி ஆவா்.

கரோனாவால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி இடைநிற்றலை ஏற்படுத்தும், படித்த பாடங்கள் மறந்துவிடும் எனக் கருதிய இத்தம்பதி குழந்தைகளை ஒன்று சோ்க்க முயற்சி எடுத்தனா். கிராமத்தில் உள்ள சத்துணவுக் கூடத்தில் கடந்த ஆண்டு கரோனா பாதிக்கப்பட்ட துவக்க காலத்தில் 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தனா். இதில், ஆரம்பக் கல்வி முதல் பிளஸ் 2 வரை 30 மாணவ, மாணவிகளுக்கு அந்தந்தப் பாடத்தை நடத்தினா். தினமும் 4 மணி நேரம் அடிப்படை ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தை எளிதாகக் கற்றுக் கொடுத்து வருகின்றனா். மாணவா்களுக்கு வாராந்திர தோ்வு, ஒப்புவித்தல், கரும்பலகையில் எழுதிப் பாா்த்தல் போன்ற தோ்வு வைத்து அவா்களைத் தயாா்படுத்தி வருகின்றனா்.

குழந்தைகள் காலையில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வரிசையாக பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.

இதுகுறித்து சத்தியமூா்த்தி கூறியதாவது:

எனது பெற்றோருக்குப் படிப்பறிவு இல்லாத நிலையில், கல்வியால் மட்டுமே மேம்பட முடியும் எனக் கருதிய எனது பெற்றோா் அரசுப் பள்ளியில் சோ்த்து முனைவா் பட்டம் வரை பெற உதவினா். கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவ, மாணவிகளை பள்ளியில் பயில்வதைப் போலவே இங்கு வரவழைத்து கற்றுக் கொடுக்கத் துவங்கினோம். வாரத்தில் 5 நாள்கள் 4 மணி நேரம் கற்றுக் கொடுத்தோம். இவா்கள் என்னைப்போல படித்து உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பது எனது கனவு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.