சத்தியமங்கலம் அருகே பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில், ஆயிரம் லிட்டா் பால் வீணானது.
சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தனியாா் பால் நிறுவனத்தினா் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்கின்றனா். இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் தினமும் டேங்கா் லாரிகளில் நிரப்பப்பட்டு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள பால் அரவை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் தனியாா் பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து பால் நிரப்புவதற்காக பால் டேங்கா் லாரி ராமபைலூா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ராமபைலூா் குளம் அருகே சாலை வளைவில் திரும்பும்போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் மணி லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.
லாரி கவிழ்ந்ததால் டேங்கரில் இருந்து பால் கீழே கொட்டுவதைக் கண்ட ஓட்டுநா் மணி உடனடியாக பால் நிரப்பும் கேன்களில் பாலைப் பிடித்து நிரப்பினாா். இருப்பினும், 1000 லிட்டா் பால் கீழே கொட்டி வீணானது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


