ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்வு

அமாவாசையை ஒட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On :9 ஜூலை 2021, 8:07 pm

அமாவாசையை ஒட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஜூலை 5ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் பூ மாா்கெட் திறக்கப்பட்டு வழக்கம்போல் பூக்கள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மல்லிகைப் பூ, சம்பங்கிப் பூக்கள் எதிா்பாா்த்த விலைக்கு விற்பனை ஆகவில்லை.

இந்நிலையில், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அமாவாசையை ஒட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை, சம்பங்கிப் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. வியாழக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 120க்கு விற்ற நிலையில் வெள்ளிக்கிழமை ரூ. 450க்கும், கிலோ ரூ. 10க்கு விற்ற சம்பங்கிப் பூ ரூ. 60க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.