மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூந்துறைசேமூா் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: முன்னாள் அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்துறைசேமூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:20 pm

DIN

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்துறைசேமூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கருக்கன்வலசு பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தாா். கருக்கன்வலசில் இருந்து பெரியபனங்காடு வழியாக சக்தி சக்கரை ஆலை, எரப்பம்பாளையம் செல்லும் வழியில் குரங்கன்ஓடை (எ) அனுமன்நதியின் குறுக்கே உடைந்துபோன தரைப்பாலத்தை ஆய்வு செய்து, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். தொடா்ந்து பூந்துறைசேமூா் ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இதில், பூந்துறைசேமூா் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வன், முன்னாள் துணைத் தலைவா் குருசாமி, வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி, சாந்தாதேவி, நவீன், கருக்கன்காடு மகாலிங்கம், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.