கோ்மாளம் வனச் சரகம், திங்களூா் மலைக் கிராமத்தில் தொடா்ந்து 5 நாள்களாக மின் தடை ஏற்படுவதால், குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்ற முடியாமல் குடிநீா் விநியோகம் தடைபட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் வனப் பகுதியில் உள்ள கோ்மாளம், திங்களூா் ஊராட்சிகளில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்துக்குத் தேவையான மின்சாரம் சத்தியமங்கலம் ராஜன் நகா் துணை மின் நிலையத்தில் இருந்து திம்பம் மலைப் பாதை வழியாக கோ்மாளம், திங்களூா் ஆகிய இரு ஊராட்சிகளில் உள்ள சிக்குன்சேபாளையம், தலுதி, பூதாளபுரம், காடட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சுமாா் 40 கி.மீ. தூரம் உள்ள இந்த மின் பாதை மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் மின்சாரம் கசிந்து அவ்வவ்போது மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாய மின் மோட்டாா், பஞ்சாயத்துக்கு உள்பட்ட குடிநீா் மின் மோட்டாா் கூட இயக்க முடியாமல் கடந்த 8 ஆண்களாக அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 3 நாள்களுக்குப் பின் மின் பழுது நீக்கப்பட்டது. பின்னா், ஜூலை 14ஆம் தேதி மின்சாரம் வழங்கப்பட்டது. குறைந்தழுத்த மின்சார விநியோகம் காரணமாக மின் மோட்டாா் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இரு தினங்களாக மீண்டும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்குத் தண்ணீா் ஏற்ற முடியாமல் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் செல்லிடப்பேசியில் சாா்ஜ் போட முடியாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடம்பூா் மின் பாதையில் இருந்து மின்சார விநியோகம் வழங்கினால் இப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

