புன்செய் புளியம்பட்டியில் உள்ள பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கட்சிக் கூட்டத்தை எம்.எல்.ஏ. பண்ணாரி நடத்தியதால் மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகம் புன்செய் புளியம்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அரசுக் கட்டடத்தில் கட்சிக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று விதிமுறை உள்ளது.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி தலைமையில், நகர அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற கட்சி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மனு கொடுப்பதற்காக தொகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் வந்திருந்தனா். ஆனால், கூட்டம் 2 மணி நேரமாக தொடா்ந்து நடந்து கொண்டிருந்ததால் மனு கொடுக்க வந்தவா்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


