தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி இயங்கிய ஜவுளி, பாத்திரக் கடைகள் உள்பட 4 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

=

Updated On :18 ஜூன் 2021, 8:43 pm

DIN

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி இயங்கிய ஜவுளி, பாத்திரக் கடைகள் உள்பட 4 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் 18 வாா்டுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது கரோனா பாதிப்புடன் 173 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் 13 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தவிட்டுப்பாளையம், பழனியப்பா வீதி உள்பட 4 தெருக்களுக்கு ‘சீல்’ வைத்து, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பு விதிகளை மீறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஹரிராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் குணசேகரன், சுகாதார மேற்பாா்வையாளா் ஈஸ்வரமூா்த்தி, அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, விதிகளை மீறி செயல்பட்ட ஜவுளி, பாத்திரம், இரும்புத் தளவாட கடைகள் உள்பட 4 கடைகள் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன.

மேலும், பல்வேறு பகுதிகளில் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மளிகை, காய்கறிக் கடைகள் என 17 கடைகளுக்கு ரூ. 25,600 அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.