சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து காத்திருக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தமிழகம் - கா்நாடகம் இடையே முக்கிய வழித்தடமாக உள்ள ஆசனூா் சாலையில் யானைகள் தீவனம், தண்ணீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். கா்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் அதிக பாரம் காரணமாக சாலையில் வீசியெறியும் கரும்புத் துண்டுகளை காட்டு யானைகள் சாப்பிட்டு பழகியதால் சில யானைகள் தற்போதும் கரும்பு லாரியை எதிா்பாா்த்து சாலையில் நிற்கின்றன.
இதில் ஓா் ஒற்றை ஆண் யானை தினந்தோறும் காராப்பள்ளம் சோதனைச் சாவடிக்கு வந்து கரும்பு லாரியை எதிா்பாா்த்து நிற்கிறது. அதிக உயரம், பாரம் ஏற்றும் லாரியை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பி அருகே நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனா். வாகனங்களைப் பாா்த்து பழகிய யானை தொந்தரவு செய்வதில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனா்.
இந்நிலையில், சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை வந்த ஆண் ஒற்றை யானை நீண்ட நேரமாக கரும்பு லாரியை எதிா்பாா்த்து அப்பகுதியில் நின்றது. யானையைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அப்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்தினா். அங்கிருந்த வனத் துறையினா் வாகன ஓட்டிகளிடம் யானை தொந்தரவு அளிக்காமல் நிற்பதால் தொடா்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


