பா்கூரில் ஜாதி சான்றிதழ் கேட்டுகருப்புக் கொடி போராட்டம்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் மலையனூா், தாமரைக்கரை, மின்தாங்கி, கல்வாரை, கடை ஈரட்டி, கோயில் நத்தம், தொல்லி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் சுமாா் 1500 குடும்பத்தைச் சோ்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியல் பழங்குடியினப் பிரிவில் மலையாளி இன ஜாதி சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இதுவரை இவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், மலைப் பகுதியில் வசிக்கும் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக இம்மக்கள் கூறுகின்றனா்.
இந்நிலையில், ஜாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டி மலைக் கிராமங்களில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் வரும் சட்டப் பேரவைத் தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...