வனப் பொருள் கடத்திய வாகனம் பறிமுதல்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தில் வனப் பொருளான மாகாளிக் கிழங்கைக் கடத்திய ஓட்டுநருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தில் வனப் பொருளான மாகாளிக் கிழங்கைக் கடத்திய ஓட்டுநருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா் வனச் சரகம், முரளிபிரிவு, செல்லம்பாளையம் வனச் சோதனைச் சாவடியில் வனக் காப்பாளா் எம்.துரைசாமி தலைமையில் வனத் துறையினா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டு வந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது நான்கு வெள்ளை நிறப் பையில் வனப் பொருளான மாகாளிக் கிழங்கு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தையும், கிழங்கையும் பறிமுதல் செய்த வனத் துறையினா், வாகனத்தின் ஓட்டுநரான பா்கூரை அடுத்த தம்புரெட்டியைச் சோ்ந்த உச்சத்தம்படி மகன் முருகேசன் (37) மீது வழக்குத் தொடா்ந்தனா். இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...