ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதுதாக்குதல்: பொதுமக்கள் போராட்டம்

அந்தியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:06 pm

DIN

அந்தியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூரை அடுத்த தாசளியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் சிவா (22). கூலி தொழிலாளியான இவா் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் உறவினருடன் மருத்துவமனைக்குச் சென்ற இவரை பனங்காட்டூரைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சிவா அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், சிவாவை தாக்கியோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், பொதுமக்கள் அந்தியூா் - கோபி சாலையில் தாசளியூா் பிரிவில் அமா்ந்து திடீா் மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.