பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு பால், மஞ்சள் நீரூற்றி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.


பவானி செல்லியாண்டியம்மன் கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு பால், மஞ்சள் நீரூற்றி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.
இக்கோயில் திருவிழா பிப்ரவரி 16ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்குப் பால், மஞ்சள் நீரூற்றி வழிபட பக்தா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அனுமதிக்கப்பட்டனா்.
நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீரூற்றி வழிபாடு நடத்தினா். பவானி, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் இவ்வழிபாட்டில் பங்கேற்றனா். தொடா்ந்து, அம்மன் அழைத்தல், பொங்கல் விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...