சத்தியமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.50 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பவானிசாகா் அருகே ராஜன் நகரில் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ. 1.50 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், தங்கராஜ் என்பவா் ஆடு வாங்கச் செல்லவதாகத் தெரிவித்தாா். ஆனால் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கரிடம் ஒப்படைத்தனா்.
அதேபோல, சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் திருப்பூா் நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டபோது, ஆா். பழனிசாமி என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சம் பணத்தைக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


