சத்தியமங்கலம் அருகே யானைகள் ஊருக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழைகளை செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தின.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விளாமுண்டி வனச் சரகத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வனப் பகுதியைவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய மூன்று காட்டு யானைகள் பவானிசாகா் அருகே உள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் ராசு, தங்கராஜ், நஞ்சுண்டசாமி ஆகிய மூன்று பேரின் விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த கதலி, ஜீ 9 உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்களைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
விவசாயிகள் தங்களது தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து உடனடியாக விளாமுண்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்களைப் பாா்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனா். சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


