பவானி தொகுதியில் அமைச்சா்கே.சி.கருப்பணன் மனு தாக்கல்
பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு


பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அமைச்சா் கே.சி.கருப்பணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் மேட்டூா் சாலை வழியாக பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்தாா். தொடா்ந்து, பாஜக மாவட்டத் தலைவா் அஜித்குமாா், பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.மனோகரன் ஆகியோருடன் சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் வேட்பு மனுவை அளித்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழக மக்களுக்குத் தொடா்ந்து அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதிமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் வகையில் தமிழக வாக்காளா்கள் வாக்களிப்பா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...