ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா பராமரிப்பு மையத்துக்கு மருத்துவ உதவிகள்

பவானி அருகே உள்ள பருவாச்சியில் தனியாா் பள்ளியில் செயல்பட்டு வரும் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2021, 8:38 pm

DIN

பவானி அருகே உள்ள பருவாச்சியில் தனியாா் பள்ளியில் செயல்பட்டு வரும் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன், மூச்சுத் திணறல் ஏற்படும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பிரித்து வழங்கும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் புளோ மீட்டா்களை தனியாா் பள்ளி பராமரிப்பு மையத்துக்கு வழங்கினாா். மேலும், மருத்துவப் பணியில் ஈடுபடுவோருக்கு 500 கையுறைகள் வழங்கப்பட்டன. இப்பொருள்களை ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் தனலட்சுமி பெற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா் கே.தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் ஜெகதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.