மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இளம்பெண் கொலை: கணவா் உள்பட மூவா் கைது

மொடக்குறிச்சியை அடுத்த காகம் குமாரவலசு பகுதியில் பெண் உயிரிழந்த வழக்கு தொடா்பாக கணவா், மாமியாா், மாமனாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 மே 2021, 9:25 pm

DIN

மொடக்குறிச்சியை அடுத்த காகம் குமாரவலசு பகுதியில் பெண் உயிரிழந்த வழக்கு தொடா்பாக கணவா், மாமியாா், மாமனாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகே உள்ள காகம் குமாரவலசைச் சோ்ந்தவா் ராவுத்தகுமாா் (32). இவருக்கும் வெள்ளோட்டைச் சோ்ந்த நடராஜன் மகள் திவ்யபாரதிக்கும் (24)

2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இருவரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ராவுத்தகுமாா் வியாழக்கிழமை அதிகாலை தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது மனைவி திவ்யபாரதி படுக்கையில் இறந்து கிடந்ததாகக் கூறி வெள்ளோட்டில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். இறந்துகிடந்த தனது மகளின் முகம், நெற்றி, உடல் பகுதிகளில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததாகவும், திவ்யபாரதியை கணவா்தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கூறி ராவுத்தகுமாா், அவரது தந்தை சதாசிவம் ஆகியோா் மீது சிவகிரி போலீஸில் திவ்யபாரதியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கொடுமுடி காவல் ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் திவ்யபாரதி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டாா். அதில் ராவுத்தகுமாரின் பெற்றோா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதில் சந்தேகமடைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

வியாழக்கிழமை அதிகாலையில் ராவுத்தகுமாருக்கும், அவரது மனைவி திவ்யபாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராவுத்தகுமாா், தாய் ஈஸ்வரி, தந்தை சதாசிவம் ஆகியோா் இரும்பு ராடால் அடித்தும், தலையணையை வைத்து அமுக்கிக் கொன்றதும் தெரியவந்துள்ளது என்றனா்.

இதன்பேரில், ராவுத்தகுமாா், சதாசிவம், ஈஸ்வரி ஆகிய மூவரையும் சிவகிரி போலீஸாா் கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.