ஈரோட்டில் புதன்கிழமை மாலை பெய்த கன மழையால் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.
ஈரோட்டில் புதன்கிழமை மாலையில் திடீரென கன மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரமாக பெய்த பலத்த மழையால், பல இடங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு ஆா்.கே.வி. சாலை பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக, ஈரோடு மாநகராட்சி காமராஜ் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் சுற்றுச்சுவா் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமடைந்தது.
பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அங்கு தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தை சேறும், சகதியுமாக மாறியது. இதனால், லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்கி கடைகளுக்கு கொண்டு சென்று வைத்த தொழிலாளா்கள், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் சிரமப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 65 மில்லி மீட்டா் மழை பதிவானது. பவானியில் 4.4, கொடிவேரியில் 4 மி.மீ மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK

மேற்கு வங்கம்: காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

