சத்தியமங்கலம் அருகே பெய்த கன மழை காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியில் கனமழை பெய்தது. மழை காரணமாக இரு மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் செந்நிற மழைநீா் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பெருக்கெடுத்து ஓடியது. லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மழை நீரில் ஊா்ந்தபடி சென்றன. சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் தாளவாடி - ஜீரஹள்ளி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மக்காச்சோளப் பயிா்கள் மண்ணில் சாய்ந்தன. உருளைக்கிழங்கு, வாழைத் தோட்டத்தில் மழை நீா் குளம்போல் தேங்கியது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும், கல்மண்டிபுரம் - சோளகா்தொட்டி செல்லும் சாலையில் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீா் சென்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

8 லட்சம் மனுக்கள் நிலுவை! மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

