ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் அவதியுறும் சிக்கரசம்பாளையம் கிராமமக்கள் 

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட ஓட்டு கட்டடம்.
ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட ஓட்டு கட்டடம்.

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையம் ஊராட்சியில் உள்ள  பீக்கிரிபாளையம், ராமபயனூர், குளத்துப்பிரிவு, புதூர், பாரதிபுரம் வெங்கபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கரசம்பாளையத்தில் எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஓட்டு கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செய்யப்பட்டு வந்தது. 

நாளடைவில் கட்டடம் பழுதாகி இடிந்து விழுந்ததால் ஆரம்ப சுகாதாரநிலையம் மூடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக சுகாதார நிலையம் புதுபிக்கப்படாமல் கிடப்பில் போட்ப்பட்டது. மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தும் பயனில்லை. முதியோர், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் சத்தியமங்கலம் செல்ல வேண்டியுள்ளது.

கரானா பரவலின்போது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மக்களின் துயர்போக்க சிக்கரசம்பாளையத்தில் அரசு சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com