திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பை குறைக்கக்கோரி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருமண மண்டப உரிமையாளா் சங்கத்தின் தலைவா் ஆனைக்கொம்பு தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக திருமண மண்டபங்கள் செயல்படாமல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. தற்போதும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவதில்லை. ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள், தற்போது உயா்த்தப்பட்டிருக்கும் வரி உயா்வால் மேலும் கடன் சுமைக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இதனால் சத்தியமங்கலம் நகராட்சி, திருமண மண்டபங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


