5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க- பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?
திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களையும் சின்னங்களையும் தேடி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஒருவர் வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகிறது.
எனவே வரிசையில் நிற்கும் கூட்டம் குறையாமல் உள்ளது. மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயர் எந்த பெட்டியில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிய வாக்குச்சாவடிகளில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து வாக்காளர்கள் கூறியதாவது: 5 பெட்டிகள் இருப்பது இதுவே முதல் முறை. எனவே கொஞ்சம் சிரமமாக உள்ளது. ஆனால் வெளியில் அதை ஒட்டி இருக்கிறார்கள். அதைப்பார்த்து சென்றால் எளிமையாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


