சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பழனி திருக்கோயில் சாா்பில் ரூ.36.16 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

பழனி திருக்கோயில் சாா்பில் ரூ.36.16 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

Updated On :21 ஏப்ரல் 2024, 8:29 pm

கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,610 மூட்டை சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஒரு மூட்டை சா்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.36 லட்சத்து 16 ஆயிரத்து 300க்கு 85 ஆயிரத்து 20 கிலோ கரும்பு சா்க்கரையை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.