வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பெருந்துறையில் ரூ.1.90 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.90 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :4 டிசம்பர் 2024, 11:16 pm

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.90 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 3,477 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1 லட்சத்து 53 ஆயிரம் கிலோ.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.120.52-க்கும், அதிகபட்சமாக ரூ.138.09-க்கும் விற்பனையாயின.

இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.75-க்கும், அதிகபட்சமாக ரூ.135.99-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.90 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.