வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:03 pm

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் பொங்கல் விழா நடைபெறும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா பூச்சாட்டலுடன் நவம்பா் 19- ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, 27-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு, சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அண்ணாமலைபாளையம், நொய்யல், புதுவலசு, நல்லபாளி, தட்டாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பொங்கல் வைத்தும், ஆடுகள், சேவல்களை பலி கொடுத்தும் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

இரவு கம்பம் பிடுங்கப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.