பள்ளி சுற்றுச்சுவா் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சி 5 -ஆவது வாா்டுக்குள்பட்டது கங்காபுரம். இப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்

ஓட்டேரி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


