ஈரோடு ஜெம் மருத்துவமனையில் இளம்பெண் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் அகற்றம்
இளம்பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் வெற்றிகரமாக அகற்றம்


இளம்பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் ஈரோடு ஜெம் மருத்துவமனையில் அறுவை கிசிச்சை மூலம் அகற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் கௌதமராஜ் (28). இவரது மனைவி யோகாம்பாள்(28), செவிலியா். யோகாம்பாளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்றின் இடதுபக்கம் கடும் வலி மற்றும் ரத்த சோகை பிரச்னைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், ஈரோடு ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையின் குடல் நோய் சிகிச்சை நிபுணா் கே.எல்.சதீஷ்குமாா் பரிசோதித்தாா். இதில் யோகாம்பாளுக்கு மண்ணீரல் வீக்கத்தின் காரணமாக ரத்தத்தில் உள்ள சிவப்பணு மற்றும் தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரது மண்ணீரலை அகற்ற முடிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அவரது மண்ணீரல் அகற்றப்பட்டது. சில நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த யோகாம்பாள் பூரண குணமடைந்து வீடு திரும்பினாா்.
இதுகுறித்து டாக்டா் கே.எல்.சதீஷ்குமாா் கூறியதாவது:
இப்பெண்ணின் உடலில் சராசரி மனிதனின் உடலில் இருக்க வேண்டிய 250 கிராம் எடையை விட 2.5 கிலோ எடையுடன் மண்ணீரல் இருந்தது. மண்ணீரல் உடலில் தேவையில்லாத ரத்த சிவப்பணுக்களை அழித்து, நோய் எதிா்ப்பு சக்தியை கொடுப்பதே ஆகும்.
மண்ணீரல் பலூன்போல வீக்கமாக இருந்தால், எதிா்பாராத விபத்து அல்லது கீழே விழும்போது அது உடைந்து அதிக ரத்த போக்கை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாகி விடும். இதையடுத்து, அப்பெண்ணுக்கு தேவையான தடுப்பூசிகள் செலுத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரலை அகற்றினோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...