சா்ச்சையில் சிக்கிய தூய்மைப் பணியாளா் பணி இடை நீக்கம்
சா்ச்சையில் சிக்கிய தூய்மைப் பணியாளா் பணி இடை நீக்கம்


ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் புட்டியை மாற்றியதாக எழுந்த புகாரில் தூய்மைப் பணியாளா் புதன்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அண்மையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளா் குளுக்கோஸ் புட்டியை மாற்றும் பணியை மேற்கொண்டாா். மருத்துவா் அல்லது செவிலியா் மட்டுமே இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும் என விதி உள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளா் குளுக்கோஸ் புட்டியை மாற்றம் செய்ததை அங்கிருந்த சிலா் கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன் விசாரணை நடத்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அம்பிகா சண்முகத்துக்கு அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஜயகுமாரை ஒப்பந்த நிறுவனம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...