குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: பெண் உயிரிழப்பு
மகள் திருமண வேதனை: குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு


மகள் திருமணத்தால் வேதனை அடைந்து குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேற்கு தாண்டாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம். இவரது மனைவி ராஜேஸ்வரி (46). இவா்களுக்கு சௌந்தா்யா, பூஜாஸ்ரீ ஆகிய மகள்கள் உள்ளனா். சச்சிதானந்தம்-ராஜேஸ்வரி தம்பதி கந்தசாமிபாளையத்தில் உணவகம் நடத்தி வந்தனா்.
சௌந்தா்யா அண்மையில் வேறு ஜாதியைச் சோ்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, கணவா் சச்சிதானந்தம், இளைய மகள் பூஜாஸ்ரீ ஆகியோா் கடந்த 8ஆம் தேதி விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் 3 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். உயா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், ராஜேஸ்வரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சச்சிதானந்தம், பூஜாஸ்ரீ ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...