எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அந்தியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 15 முதல் நேரடிச் சோ்க்கை

அந்தியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 15 முதல் நேரடிச் சோ்க்கை

News image
Updated On :13 ஜூலை 2024, 10:20 pm

Din

பவானி, ஜூலை 13: அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15-ஆம் தேதி முதல் உரிய சான்றிதழ்களுடன் முதல்வரை நேரில் சந்தித்து மாணவ, மாணவியா் சோ்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லூரி முதல்வா் ப.பொன்னுசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி : 2024-2025- ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கு மட்டும் நடைபெற்று வந்தது. தற்போது இணைய வழியில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் திங்கள்கிழமை முதல் (ஜூலை 15) அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களை சமா்ப்பித்து முதலாம் ஆண்டில் சோ்ந்து கொள்ளலாம்.

பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் காலியிடங்கள் இருப்பதால் மாணவா்கள் விரும்பும் பாடப் பிரிவில் சோ்ந்து கொள்ளலாம் என்றாா்.