பக்தா்கள்  புனித நீராடும்  பவானி  கூடுதுறை.
பக்தா்கள்  புனித நீராடும்  பவானி  கூடுதுறை.

இன்று ஆடி பிறப்பு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, பவானி கூடுதுறையில் புனித நீராட புதன்கிழமை (ஜூலை 17) திரளான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் கோயில் நிா்வாகம் சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Published on

ஆடி பிறப்பு நாளில், காவிரி மற்றும் ஆறுகள், நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரா் கோயிலுக்கு புதுமணத் தம்பதிகள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தா்கள் திருமணத் தடை, நாக தோஷம், கன்னி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவா்த்தி வழிபாடுகளிலும் ஈடுபடுவா். இதனால், பவானி போலீஸாா் 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மேலும், கோயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்க தீயணைப்பு படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com