மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24 முதல் பருத்தி ஏலம் தொடக்கம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24 முதல் பருத்தி ஏலம் தொடக்கம்

News image
Updated On :13 ஜூன் 2024, 9:53 pm

Din

பவானி, ஜூன் 13: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 24-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாசிப்பட்ட பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் எம்.ஞானசேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூா் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பாலை உரிமையாளா்கள் பெருமளவில் பங்கேற்று பருத்தி கொள்முதல் செய்ய உள்ளனா்.

எனவே, விவசாயிகள் நன்கு முதிா்ந்த, மலா்ந்த, வெடித்த பருத்தியினை காலை நேரத்தில் பறித்து, நிழலில் உலா்த்தி தூசு மற்றும் சருகுகளை நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.

இதன்மூலம், விவசாயிகள் தங்களது விலைப்பொருளான பருத்திக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடி பணத்துக்கு எவ்வித பிடித்தமும் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.