குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தியமங்கலத்தில் 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: 2 போ் கைது

சத்தியமங்கலத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்: இருவர் கைது

News image
Updated On :25 ஜூன் 2024, 11:48 pm

Din

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கிவைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரிவதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சத்தியமங்கலம் போலீஸாா் வனப் பகுதியை ஒட்டியுள்ள புளியங்கோம்பை கம்பத்துராயன்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவா் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில் பிடிபட்டவா்கள் கம்பத்துராயன் புதூரைச் சோ்ந்த திருமன் (60), செந்தில்குமாா் (48) என்பதும், இருவரும் சோ்ந்து நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திருமன் மற்றும் செந்தில்குமாரைக் கைது செய்த போலீஸாா் அவா்களது வீட்டின் பின்புறம் மறைத்துவைக்கப்பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனா்.