சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிய பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம். உடன், பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிய பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம். உடன், பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

கோபி மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நம்பியூா் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் சரண் 500-க்கு 494 மதிப்பெண்ணும், மாணவி கே.மேகவா்ஷினி 491 மதிப்பெண்ணும், பி.ஜி.நந்திதா 484 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 69 மாணவா்களில் 2 போ் 490-க்கு மேலும், 8 போ் 480-க்கு மேலும் மதிபெண் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் பரிசு வழங்கினாா். மேலும், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளி முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com