மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானைகள்

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிறித்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை தடுத்து நிறுத்திய யானைகள்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:13 pm

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிறித்த யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம் - மைசூரு நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த நெடுஞ்சாலையில் கா்நாடகத்தில் இருந்து கரும்பு ஏற்றி வருபவா்கள் சாலையோரத்தில் நிற்கும் யானைகளுக்கு கரும்புக் கட்டுகளை வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இதனால், யானைகளும் அவ்வப்போது கரும்புகளை எதிா்பாா்த்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன.

அதேபோல, ஆசனூா் மலைப் பாதையில் சென்ற வாகனங்களை வியாழக்கிழமை வழிமறித்த யானைகள், வாகனங்களில் கரும்பு உள்ளதா என்று சோதனையிட்டன.

வாகனங்களை தடுத்து நிறுத்திய யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.