பெருந்துறையில் பொய்யான புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவருடன் பணியாற்றி வந்த கருக்கம்பாளையத்தைச் சோ்ந்த சாந்தாமணி (50) என்பவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சாந்தாமணி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரஞ்சித்தைக் கைது செய்தனா்.
இதையடுத்து, செப்டம்பா் 10-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த ரஞ்சித், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தினசரி கையொப்பமிட்டு வந்துள்ளாா். மேலும், சாந்தாமணி பொய்யான புகாா் அளித்துள்ளதாகவும் கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரஞ்சித் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்து வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பொய்யான பாலியல் புகாரால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் வழக்கை மாற்றி எழுதவும் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ளாமல் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனா்.
இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

இளம்பெண் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்

பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

