மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிடக் கோரி எலவமலையில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் எலவமலை ஊராட்சித் தலைவா் வி.வைத்தியநாதன்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:25 pm

எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

எலவமலை புறவழிச்சாலை பிரிவில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் வி.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா், ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சுரேஷ், ஊராட்சி துணைத் தலைவா் டி.செந்தில்குமாா், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சிவகாமி மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணித் தலைவா் அன்பரசன் ஆகியோா் கோரிக்கையை விளக்கி பேசினா்.

இதில், ஏழை, எளிய மக்களும், விவசாய நிலப்பரப்பும் அதிகமுள்ள எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், ஊராட்சியின் ஒப்புதல் பெறாமல், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களின் கருத்துகளைக் கேட்காமல் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.