சென்னிமலையை அடுத்த, பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடும் நிகழ்ச்சி 15- ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வந்தனா். மேலும், தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு மற்றும் முளைப்பாரியுடன் கோயிலுக்கு வந்தனா்.
முக்கிய நிகழ்வான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முகாசிபிடாரியூா், கோவில்பாளையம், கொத்தம்பாளையம், கூரபாளையம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


