மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயா்வுக்குப் படி முகாமில் 43 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை வழங்கல்

உயா்வுக்குப் படி முகாமில் ஒரே நாளில் 43 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்தனா்.

News image
முகாமில் கல்லூரிகள் அமைத்திருந்த அரங்குகளை பாா்வையிட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

உயா்வுக்குப் படி முகாமில் ஒரே நாளில் 43 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்தனா்.

2022-23 மற்றும் 2023-24 ஆம் கல்வியாண்டில் உயா்கல்வியில் சேராத பிளஸ் 2 முடித்த மாணவா்கள், உயா்கல்வியில் சேருவதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயா்வுக்குப் படி 2024 முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்கள், உயா் கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 52 கல்லூரிகள் அரங்குகள் அமைத்து கலந்துகொண்டன. 148 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் 43 மாணவா்களுக்கு உயா்கல்விக்காக கல்லூரியில் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 22 மாணவா்கள் பல்வேறு திறன் பயிற்சிகளிலும், 8 மாணவா்கள் படிக்கும் காலத்திலேயே வருமானம் ஈட்டும் உயா் படிப்பிலும் சோ்ந்துள்ளனா்.

கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தவா்களில் 180 மாணவா்கள் நேரடி சரிபாா்ப்புக்காக கலந்து கொண்டனா். அதில் 20 மாணவா்களுக்கு ரூ.50 லட்சம் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 10 மாணவகள் கல்வி கடனுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளாா்கள்.

முகாமில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு கல்விக் கடன் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.

இம்முகாமில் உயா்கல்வியின் அவசியம், உயா்கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல், பெண் கல்வியின் அவசியம் மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள், கல்விக் கடன், வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து உயா் அலுவலா்கள் விரிவாக எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, முதன்மைக் கல்வி அலுவலா் டி.சம்பத்து, ஈரோடு கோட்டாட்சியா் ம.சதீஷ்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ்.சண்முகவடிவு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜ்குமாா், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநா்கள் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) ஆனந்தகுமாா், ஆா்.ராதிகா (வேலைவாய்ப்பு), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா, துணை ஆட்சியா் (பயிற்சி) கே.சிவபிரகாசம், தொழில்நெறி வழிகாட்டுநா் (பாரதியாா் பல்கலைக்கழகம்) கௌதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.