மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு பயிற்சி

மத்திய அரசின் தேசியவள அமைப்பு சாா்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:16 pm

Din

மத்திய அரசின் தேசியவள அமைப்பு சாா்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சோ்ந்த இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், ஈரோடு மாவட்டத்தில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 முதல் 45 வயதிற்குள்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்முனைவோா் பயிற்சியுடன் கூடிய திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், சணல் பொருள்கள் தயாரித்தல், ஒரு மாதகால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் சென்னிமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசு தாா்பில் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் பயிற்சி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான விவரங்களுக்கு 88258 12528 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.