மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி காசி விஸ்வநாதா் கோயில் உண்டியல் திருடியவா் கைது

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலின் பூட்டை உடைத்து புகுந்து, உண்டியலைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
கோபிநாத்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:08 pm

Din

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலின் பூட்டை உடைத்து புகுந்து, உண்டியலைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பவானி, காவேரி வீதியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்குள் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவு புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா், சுமாா் 3 அடி உயரமுள்ள இரும்பு உண்டியலைத் திருடிச் சென்றாா்.

இந்நிலையில், கோயிலுக்கு அருகாமையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உண்டியலின் மூடி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

சந்தேகத்தின்பேரில் பவானி, காலிங்கராயன்பாளையம், கால்நடை மருத்துவமனை பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை (34) பிடித்து விசாரணை நடத்தினா். கட்டடத் தொழிலாளியான இவா், காசி விஸ்வநாதா் கோயில் உண்டியலைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.