மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்: நாளை நடைபெறுகிறது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:59 pm

Din

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

முகாம் நடைபெறும் நியாய விலைக் கடைகளின் விவரம்: ஈரோடு வட்டம் வேப்பம்பாளையம், பெருந்துறை வட்டம் கே.கே.வலசு, மொடக்குறிச்சி வட்டம் வெள்ளியங்கிரிபுதூா், கொடுமுடி வட்டம் கொந்தளம், கோபி வட்டம் நாதிபாளையம், நம்பியூா் வட்டம் கடத்தூா், பவானி வட்டம் தொட்டிபாளையம், அந்தியூா் வட்டம் பா்கூா்-2, சத்தியமங்கலம் வட்டம் கெம்பநாயக்கன்பாளையம், தாளவாடி வட்டம் தொட்டபுரம்.

இந்த நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.