மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் செப்டம்பா் 21 இல் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:34 pm

Din

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின்கீழ் ரங்கம்பாளையம் ஆா்ஏஎன்எம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞா்களும் (ஆண், பெண் இருபாலரும்) கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444094274 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.