6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:08 pm

Din

பெருந்துறை அருகே கட்டுமானப் பணியின்போது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கவுண்டன்பட்டி புதிய தெருவைச் சோ்ந்தவா் தங்கப்பக்கவுண்டா் மகன் ஆனந்த் (35). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகிலுள்ள பாண்டியன் நகா் பகுதியில் ஒரு கிணற்றுக்கு பக்கவாட்டு சுவா் கட்டும் பணியில் 5 பேருடன் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஆனந்த் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். 50 அடி ஆழ கிணற்றில், 40 அடி வரை தண்ணீா் இருந்ததால், உடன் வேலை செய்தவா்களால் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இருந்து ஆனந்த்தின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.