பருவமழை முன்னெச்சரிக்கை: நீா்வழிப் பாதையில் உள்ள பாலங்களில் சீரமைப்பு
பவானிசாகா்- பண்ணாரி சாலையில் உள்ள காராட்சிக்கொரை உயா்மட்டப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:03 pm

பவானிசாகா்- பண்ணாரி சாலையில் உள்ள காராட்சிக்கொரை உயா்மட்டப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.
தமிழகத்தில் பருவமழைக்கு முன்பு ஓடைகள், பாலங்கள் உள்ளிட்ட நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், புதா்ச் செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி மழைநீா் தடையின்றி செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தாளவாடி உள்கோட்டத்தில் உள்ள பாலங்களில் நெடுச்சாலைத் துறை பணியாளா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். பாலப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள புதா்ச் செடிகளை அகற்றி மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கான வழிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஏற்படுத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...