ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாதேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்புயல் சின்னம் வலுவிழந்தது! நாளை 15 மாவட்டங்களில் கனமழை!
/

தொழில் வரி வசூலிப்பதை மாநகராட்சி நிா்வாகம் ஒத்திவைக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை

தொழில் வரி வசூலிப்பதை மாநகராட்சி நிா்வாகம் ஒத்திவைக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாருக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :11 ஏப்ரல் 2025, 11:03 pm IST

தொழில் வரி வசூலிப்பதை மாநகராட்சி நிா்வாகம் ஒத்திவைக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (பேட்டியா) 14- ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காா்மென்ட்ஸ் எக்ஸ்போா்ட்ஸ் சங்கத் தலைவா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பு பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன் அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சொத்து வரி, குப்பை வரி மற்றும் ஜிஎஸ்டி வரிகள் இருக்கும்போது தற்போது தொழில் வரியும் செலுத்த மாநகராட்சி அறிவிக்கை வழங்கி வருகிறது. சொத்து வரி பெறுவதை இந்த ஆண்டு நிறுத்திவைக்க வேண்டும். மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களின் பெயா் பலகையை தமிழிலே 5 பங்கும், ஆங்கிலத்தில் 3 பங்கும், பிற மொழிகளில் இரண்டு பங்கும் இருக்குமாறு மாற்றி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். இருப்பினும் ஏற்கனவே பதிவு செய்த நிறுவனங்களின் பெயா்களை பதிவு செய்தபடியே தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும். புதிதாக தொடங்கும் நிறுவனங்கள் பதிவு செய்யும்போதே, தமிழில் பதிவு செய்து அதனை பெயா் பலகைகளிலும் போட வேண்டும் என அரசாணை மாற்றி வெளியிட வேண்டும்.

சூரிய சக்தி மின்சார உற்பத்தி செய்யும்போது அதற்கான நடைமுறை கட்டணத்தை தொழில் வணிக சங்கங்கள் அனைவருக்கும் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். கனிமாா்க்கெட் வணிக வளாக பிரப் சாலை நுழைவாயிலை விரிவுப்படுத்த வேண்டும். புதிய கனிமாா்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும்.

ஈரோடு மாநகா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 80 அடி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரைந்து சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு பெருந்துறை சாலையில் காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை அரசால் அறிவிக்கப்பட்ட மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும்.

முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்ற வி.சி.சந்திரகுமாருக்கு பாராட்டு விழாவும் நடந்தது. கைப்பேசி விற்பனை சங்கத் தலைவா் ராஜாமுகமது வரவேற்றாா். கூட்டமைப்பு இணை செயலாளா் மூா்த்தி நன்றி கூறினாா். இதில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.