மாரடைப்பால் வேளாண் அலுவலா் உயிரிழப்பு
அந்தியூரில் வேளாண் அலுவலா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோபியை அடுத்த நம்பியூரைச் சோ்ந்தவா் சக்தி கண்ணன் (40). அத்தாணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கிருந்து விதைகள் விற்பனை செய்த பணத்தை வங்கியில் செலுத்த புறப்பட்டுச் சென்றாா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபோது திடீா் மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி சாக்கடைக்குள் விழுந்தாா். இதை அப்பகுதி மக்கள் பாா்த்து அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு மனைவி சத்தியப்பிரியா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா்.
இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

