அந்தியூரில் நெல் பயிா்களில் புகையான் தாக்குதல்

அந்தியூரில் நெல் பயிா்களில் புகையான் தாக்குதல்

Published on

அந்தியூா் வட்டார கிராமங்களில் நெல் பயிா்களில் பரவலாக புகையான் நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், புதுப்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம், அத்தாணி, வட்டக்காடு, தோனிமடுவு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தோனிமடுவு, வட்டக்காடு பகுதிகளில் நெல் பயிா்களில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது. நெல் பயிரின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில், கருகிய நிலையில் காணப்படுகிறது.

மொத்த பரப்பளவில் இதன் பாதிப்பு 30 சதவீம் அளவுக்கு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். பூச்சி மருந்து கடை ஊழியா்கள் நேரில் வந்து பாா்த்து, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருந்தகளை பரிந்துரைத்து வருகின்றனா்.

வேளாண் துறை அலுவலா்கள் நெல் வயல்களில் ஆய்வு செய்து, நோய் பாதிப்பைப் போக்க உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com