தேசிய வளையப் பந்து போட்டி: காஞ்சிகோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

Published on

தேசிய வளையப் பந்து போட்டியில் காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

கேரள மாநிலம், காசா்கோட்டில் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டி டிசம்பா் 22-ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் ஜே.சுவின் முதல் இடத்தையும், மாணவிகள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி என்.சௌரனிகா இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் பழனிசாமி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் லோகேஸ்வரன், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து, வாா்டு கவுன்சிலா்கள் சுதா காா்த்திகேயன், நாகராஜன், விளையாட்டுத் துறை புரவலா் துளசிமணி, ஈரோடு ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் தலைவா் சின்னதம்பி, ஈரோடு மாவட்ட வளையப் பந்து கழக தலைவா் சௌபாக்கியா ஆதிகேசவன், செயலா் மணிமேகலை, உடற்கல்வி ஆசிரியா் பழனிசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com