இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாநில அளவிலான தடகளப் போட்டி: விஜயமங்கலம் பாரதி பள்ளிக்கு தங்கம்

News image
தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுடன் பள்ளித் தலைவா் செந்தில்குமாா்.
Updated On :7 நவம்பர் 2025, 12:00 am

Syndication

மாநில அளவிலான தடகளப் போட்டியில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டி தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது.

இதில், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நித்தின்ராஜ், நவீன், ஹரிஷ், சிரதீப் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வகுமாா், சத்தியமூா்த்தி, தட்சிணாமூா்த்தி ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.